Friday, March 27, 2009

பிரதமரின் அதிகாரங்கள் என்ன? என்ன?



பிரதமர் என்பவர் யார் ? அவருக்கு என்ன அதிகாரம் ?

தேர்தலில் பெரும் பான்மை பெற்ற அரசியல் கட்சி தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். தேர்தலில் ஒரே கட்சி மெஜாரிட்டி பெறவில்லையென்றால் ஜனாதிபதி அழைக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜனாதிபதியால் பிரதமர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார். பிரதமரின் பரிந்துரைப்படி மத்திய அமைச் சர்களை ஜனாதிபதி நியமனம் செய்கிறார். பிரதமரின் சம்பளத்தை பார்லிமென்ட் முடிவு செய்கிறது. பார்லிமென்ட் உறுப்பினராக இல்லாதவரும் பிரதமராக முடியும். ஆனால், 5 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபைக்கு தேர்வு பெற வேண்டும்.

அதிகாரம்:
* நாட்டின் நிர்வாக அதிகாரம் முழுமையையும் பெற்றவர் பிரதமர்.* அமைச்சர்களின் இலாகாக்களை பகிர்ந் தளிக்கும் பொறுப்பு இவருக்குண்டு.* அமைச்சர்கள் குறித்து சர்ச்சை எழும் போது அவர்களின் ராஜினாமாவை கோரும் அதிகாரம் பிரதமருக்குண்டு.*அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பிரதமரே.*மத்திய அமைச்சர்களில் அனைவரையும் விட அதிகாரம் கொண்டவர் இவரே.* பிற துறை அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பும் பிரத மருக்கு உண்டு.

ஜனாதிபதியுடன் தொடர்பு:
*அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் இடையே பாலம் போல் விளங்குபவர் பிரதமர்.* அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் ஒவ் வொன்றையும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.* நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கு நபர்களை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு உதவி செய்யும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு.* பிரதமரின் ஆலோசனைப்படி இரு சபைகளின் கூட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.* பிரதமரின் ஆலோசனைப்படி லோக்சபாவை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.*அமைச்சரவை ஆலோசனைப்படி நாட் டிலோ, ஒரு மாநிலத்திலோ எமர்ஜன்சியை பிறப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்யலாம்.
- நன்றி தினமலர்

Monday, March 23, 2009

பா.ஜா வின் தேர்தல் வாக்குறிதிகள்


வலை நண்பர்களே ! இந்தியாவின் ஒரு பெரிய தேசிய கட்சி ஆன பி.ஜெ.பி தனது தேர்தல் வாக்குறிதிகளை வெளி விட்டுள்ளது . அதை பார்க்க பின்வருவதை கிளிக் செய்யவும்.
http://www.lkadvani.in/eng/images/stories/it-vision.pdf

Monday, March 16, 2009

வலை பதிவில் எனது முதல் பதிவு!


வணக்கம் வலை நண்பர்களே!

இன்று தான் நானும் ஒரு வலை பதிவன் ஆன நாள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் !